செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி 200 வார்டுக்கு புகைப்படம் ஒட்டியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள். ஜனவரி 31-க்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அறிவுரை கொடுத்திருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளாக வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்கள்.
டெல்லி தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையம் இங்கு இருக்கிறது. அவர்கள் தான் நவம்பர் 1ல் வெளியீட்டாளர்கள், அந்த வாக்காளர் அட்டையின் அடிப்படையில்தான் கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார்கள்.
தேர்தல் நடக்கின்ற கடைசி நாள்வரை கூட நாம் வாக்காளர் அட்டையில் சேர்க்கலாம் என்று ஆணையாளர் சொல்லி இருக்கிறார்கள். இந்த வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கும் எல்லா நகலை கொடுப்பார்கள். நாங்கள் விரைவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் எனக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இப்போது வாக்காளர் பட்டியல் வெளியிட்டதனால் அங்கு ஆளுங்கட்சி திமுக வெளியில் வந்து தேர்தல் தள்ளிப் போவது என்று அப்படி, இப்படி என்று பத்திரிகையில் அதிகாரபூர்வமற்ற தகவலை சொல்கிறார்கள்.
நாங்கள் கமிஷனர்யிடம் என்ன சொன்னோம் ? என்றால், மாநில தேர்தல் ஆணையத்தில் சொல்லி… எங்களுக்கு 15 அல்லது 20 நாட்கள் கொடுக்க வேண்டும், நீங்கள் தேர்தல் அறிவித்து ஒரு வாரத்தில் நாமினேஷன் ஆரம்பிக்கக் கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறோம், அவர்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்துகின்றோம் என்று சொல்லி இருக்கின்றார் என தெரிவித்தார்.