தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 82% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48% 2 வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறும். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 இடங்களில் மிக தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து, https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.