வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அண்டை நாடான சாட் நோக்கி அங்குள்ள ஏனைய குடியிருப்புவாசிகளும் அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாகவும், 22 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மேயர் அலி ஹாரவுன் உயிர் வாழ ஆசைப்பட்டு மிஞ்சி இருக்கும் மக்களும் தங்களுடைய குழந்தை குட்டிகளோடு அண்டை நாடான சாட் எல்லையில் முகாமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.