சிலருக்கு கழுத்து பகுதியில் கருப்பாக இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் போதுமானது அதைப்பற்றி மேலும் பார்க்கலாம்.
சிறிதளவு வெங்காயச்சாறு, சிறிதுரோஸ்வாட்டர், ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்தம் மாவு கலந்து கருப்பாக உள்ள இடங்களில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு சிறிது சிறிதாக மறையும்.
வெள்ளரிச்சாறை கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். ஓட்ஸ் பவுடர், கோதுமை மாவு,பாசிப்பயறு மாவு ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து சிறுத்து பால் சேர்த்து கலந்து அவற்றை மைபோல் குழைத்து கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.
போதுமானஅளவு தயிரை கையில் எடுத்து கழுத்து பகுதியில் மெதுவாக தேய்த்து ஊறவைத்து 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் கழுத்து பகுதியை அழுத்தி துடைக்கவும். இவ்வாறு செய்வதாலும் கழுத்தில் இருக்கும் கருப்பு மறையும்.மேலும் கெமிக்கல் பேஸ்கிரிம்,பேஸ்பவுடர் போன்றவற்றை பணம் கொடுத்து வாங்கி எதிர்காலத்தில் அவதிப்படுவதை விட வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து பண செலவே இல்லாமல் நல்ல பயனைப்பெறலாம்.