புதிய 500 ரூபாய் நோட்டுகளில் சில வகை நோட்டுகள் செல்லாது என இணையத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் சமூக வலைதளங்களில் 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அருகே பச்சை கோடு மற்றும் ஆர்பிஐ கவர்னர் கையெழுத்து அருகே கோடு உள்ள இரண்டு வகைகள் போலி நோட்டு என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. இந்த இரண்டு வகைகளும் செல்லும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.