முப்படை தலைமை தளபதி பிபின் ராவதிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டனில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக முப்படைத் தலைமை தளபதி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் பயணித்த 12 பேரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் நீலகிரி புறப்பட்டு சென்று ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று முன்தினம் பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள திருச்சி சென்றிருந்தார். பின்னர் ரங்கநாதர் கோயிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனால் அவரால் நீலகிரி செல்ல இயலவில்லை என்று கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் படத்திற்கு ஆளுநர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதற்கு முன்பு நாகாலாந்தில் வன்முறை வெடித்த போது, டெல்லியில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அவசர அழைப்பு வந்தது. அப்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் முக்கிய அழைப்பு என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு டெல்லி புறப்பட்டார். அதே போன்று தான் தற்போதும் அவசர சூழல் ஏற்பட்டது . மிக உயரிய பொறுப்பில் இருக்கும் முப்படை தலைமை தளபதி விபத்தில் உயிரிழந்தார். அதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பு வகிக்கும் தமிழக மண்ணில் விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் இருந்தும், ஆளுநர் ஏன் செல்லவில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.