கணவனை இழந்த வேதனையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் 30 வயதான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரபு திடீரென உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கணவன் இறந்ததை நினைத்து மன உளைச்சலில் இருந்த செல்வராணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக செல்வராணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வரணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.