Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான புல்கா சாப்பிட ஆசையா …..!! பாருங்கள் …!!

புல்கா செய்யும் முறை

தேவையான பொருள்கள் :

    ■  கோதுமை மாவு 2 கப்

    ■   உப்பு அரை டீஸ்பூன்

    ■  தண்ணீர் தேவையான அளவு

Image result for புல்கா

செய்முறை :

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் பிசைந்த மாவு நன்றாக இறுக்கமாக இருக்க வேண்டும் அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளுங்கள் பிறகு தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்திமாவை   போட்டு இருபுறமுமாக  இரண்டு நிமிடம் திருப்பி விடுங்கள்.

பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து சப்பாத்தி சுடும் வலையிலே அல்லது நேரடியாக அடுப்பில் சப்பாத்தியை போட்டால் அது நன்கு எழும்பி வரும் வந்தபின் திருப்பி விட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடுங்கள். இதுதான் எண்ணெய் இல்லாத புல்கா.

 

குறிப்பு :

புல்காவை எடுத்தபிறகு அதன்மேல் விரும்பியது போல் நெய் அல்லது எண்ணெய் தடவி சாப்பிடலாம் புல்கா வுக்காக சப்பாத்தி திரட்டும்போது ஒரே சீராக தேர்ந்தெடுக்க வேண்டும் ஒரு பக்கம் கடினமாகவும் ஒரு பக்கம் லேசாகவும் தேர்ந்தெடுத்தால் சப்பாத்தி எழுப்பி வராது

Categories

Tech |