கால்வாயில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் கிராமத்தில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வேலுச்சாமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வேலுச்சாமியின் சடலத்தை மீட்டனர்.
அதன்பிறகு காவல்துறையினர் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.