மேஷ ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் ஆதாயத்தை விட விரயங்கள் கூடும் நாளாக இருக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் நலனில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும், மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகவே மேற்கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக, இழுபறியாக இருந்த சில காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இன்று ஆன்மீக எண்ணம் உங்களுக்கு மேலோங்கும். ஆன்மீகதிற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை முழுமையாக மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்