Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு…. அரசு அதிரடி… !!!!

புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவிற்கும் வந்துவிட்டது. அதில் குறிப்பாக, கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று வந்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்த 33 வயதுடைய இன்ஜினியர் ஒமைக்ரான் தொற்றால் கடந்த 4-ஆம் தேதி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து தொடர்ச்சியாக பச்சிளம் குழந்தை உள்பட 17 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் 11,12 ஆகிய 2 தேதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 உத்தரவு தடை அமலுக்கு வந்ததால், பொதுக்கூட்டங்கள் பேரணிகள், ஊர்வலங்கள் நடத்த 4 நபர்களுக்கு மேல் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், மாநிலங்களிலும் பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |