ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிஃப்ட் தருவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி அடுத்த திருச்சானூர் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டில் சண்டை போட்டு கோபத்தில் திருப்பதிக்கு சென்று உள்ளார் பின்னர் அதிலிருந்து மீண்டும் திருச்சானூருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுமி நண்பர் லிஃப்ட் தருவதாக கூறி அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான். வழியில் உள்ள முல்லைக்குடி என்ற இடத்தில் பெட்ரோல் வாங்கி வருவதாக கூறி சிறுமியை இறக்கி விட்டுச் சென்ற வெங்கடேஷ் தனது நண்பனான ராஜ்மோகன் நாயக் என்பவரை உடன் அழைத்து வந்த நிலையில் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.