சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.