தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் சேலம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். சேலம் இரும்பாலை,பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. மேலும் சேலத்திற்கு இன்னும் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது என பட்டியலிட்டு கூறியுள்ளார்.