தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் சீலநாயக்கன்பட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 54.1 கோடி மதிப்பில் 61 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 31,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார்.