இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாம் நிலையின் தாக்கம் சற்றே குறைந்து வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒமைக்ரான் எனப்படும் புதிய கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய வண்ணம் உள்ளன. மேலும் சில தினங்களுக்கு முன்பு ஜிம்பாவே நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க மத்திய அரசு மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தும் திட்டத்தை பற்றி ஆலோசித்து வருகிறது. தொற்று அதிகமாகும் இடங்களில் மற்றும் விரைவில் பரவும் என எதிர்பார்க்கப்படும் சில மாநிலங்களில் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.