Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டியில் 400 விக்கெட் ….! நாதன் லயன் அசத்தல் சாதனை….!!!

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 400 விக்கெட் கைப்பற்றிய  வீரர்களில் சர்வதேச அளவில் 16-வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது .இதில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றினார் .அதோடு இங்கிலாந்து அணி வீரர் டேவிட்  மலானின் விக்கெட்டை வீழ்த்தியதன்  மூலமாக 400-வது விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன் மூலம் நாதன் லயன் 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 403 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றிய அவருடைய சிறந்த பந்துவீச்சு ஆகும். இதன்மூலம் வார்னே, மெக்ராத் ஆகியோருக்கு அடுத்தபடியாக நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றி 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .அதேபோல் சர்வதேச அளவில்           16-வது இடத்தில் உள்ளார்.

Categories

Tech |