Categories
தேசிய செய்திகள்

கண்ணை கவரும் பாரதியார் உருவ ஓவியம்…. வெறும் 4 மணி நேரத்தில் வரைந்து அசத்திய பெண்…. குவியும் பாராட்டுகள்….!!!!

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவத்தை பெண் ஒருவர் கண்ணை கவரும் வகையில் வரைந்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரும், கவிஞருமான மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஓவியரான அறிவழகி தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது உருவத்தை ரங்கோலி மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஓவிய பெண் அறிவழகி 28 அடி உயரம், 20 அடி அகலத்தில் கோலமாவை கொண்டு பாரதியாரின் உருவத்தை ரங்கோலியாக வரைந்து அசத்தியுள்ளார். இவ்வாறு வெறும் 4 மணி நேரத்தில் பாரதியாரின் உருவத்தை அவர் ரங்கோலியாக வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.

Categories

Tech |