கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர்.
இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் உள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் அச்சுறுத்தி வரும் நிலையில் பலர் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இதனால் மதுரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இன்று முதல் லாக்டோன் போடப்பட்டுள்ளது.
அதாவது பொது இடத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி கொடுத்தவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வழங்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.