Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!!!

பிரபல நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கின்ற சிலம்பரசன். இவரது  நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து சிம்பு ‘வெந்து தணிந்த காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திடீரென்று அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |