Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 தான் கடைசி…. ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் நீங்கள் பயனடையலாம். உங்கள் ரேஷன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு இடத்திலும் நீங்கள் உங்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். அதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

வழிமுறைகள்:

  • முதலில் அரசின் https://tnpds.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.
  • அதில் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா எழுத்துகளை பதிவு செய்து கிளிக் செய்தால் 7 இலக்க ஓடிபி எண் வரும்.
  • அதனை தேவையான இடத்தில் கொடுத்து மற்றொரு பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
  • அந்த பக்கத்தில், ஆதார் எண்கள் என்பதை கிளிக் செய்து, இப்பொழுது, உங்கள் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் இருக்கும்.
  • அதில், ஆதார் விவரங்களை பதிவு செய்யாவிட்டால், ஸ்கேன் என்பதை தேர்வு செய்து ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மற்றொரு முறை:

  • முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- யுஐடிஏஐ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
  • அதற்கு அடுத்ததாக start now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
  • UIDAI இணையதள பக்கத்தில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரி அனைத்தையும் பதிவிடுங்கள்.
  • அதன் பிறகு திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் இருந்து உங்கள் ரேஷன் அட்டையின் வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களை பதிவு செய்க.
  • உடனே உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் otp எண்ணை பதிவிடவும்.
  • அதன் பிறகு இறுதியாக ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.
  • உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு உங்களுடைய ரேஷன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.

Categories

Tech |