Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் வாகனங்களை சாலையில் நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மெது உள்ள கலால் வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் கிளை தலைவர்கள் வரதராஜன், பழனிசாமி, கிளை செயலாளர்கள் மாணிக்கம், சி.ஐ.டி.யு மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ்,போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிவேல், சங்க நிர்வாகிகள் சுப்பிரமணிய பெரியசாமி உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். இதே போல் எருமபட்டி பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வாகனங்களை சாலையில் நிறுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முத்தக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியகுழு செயலாளர் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |