மணத்தக்காளி கீரை குழம்பு செய்முறை
தேவையான பொருள்கள்
மணத்தக்காளிக்கீரை- ஒரு பெரிய கட்டு
துவரம்பருப்பு- 200 கிராம்
சின்ன வெங்காயம்- 50 கிராம்
தக்காளி- 3
பச்சை மிளகாய்- 6
பூண்டு- மூன்று சிறிய பல்
புளி சிறிது –எலுமிச்சை அளவு
மஞ்சப்பொடி- ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு- ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் –கால் டேபிள்ஸ்பூன்
சீரகம்- அரை டீஸ்பூன்
மிளகாய்- ஒன்று
கறிவேப்பிலை- இரண்டு கொத்தது
செய்முறை
முதலில் கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். துவரம்பருப்பை 200 மில்லி தண்ணீரில் மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும். 2 விசில் வந்ததும் நிறுத்தி அதனை இறக்கவும்.
பின்னர் அதனுடன் பெருங்காயம் பூண்டு கீரை உப்பு சேர்த்து மீண்டும் 2 விசில் வேக வைக்கவும். இறக்கி மத்தால் நன்றாக மசித்து வைக்கவும் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும். சிவந்ததும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.
பின் கீரை கலவையை ஊற்றி மேலும் பத்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மிளகாய் கிள்ளிப்போட்டு கடுகு ,உளுந்தம் ,பருப்பு, சீரகம் வெடிக்க விடவும் இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப்போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறுதியாக மூடி வைக்கவும்.
இப்போது மணத்தக்காளி கீரை குழம்பு ரெடி