Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல்…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் வரை வட கிழக்கு பருவமழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 5000க்கும் மேற்பட்ட ஹேக்டெர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு செய்தனர். அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், புதுச்சேரி மழை வெள்ளப் பாதிப்புக்காக இடைகால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நிவாரணம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் மழை பாதிப்பால் அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கிடையில் அடுத்த வாரம் முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்குரூ.5,000 வழங்கப்படும் என்றும் தேர்தலின்போது வாக்குறுதிகளில் 5 ஆண்டுகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

Categories

Tech |