அரசு பேருந்தில் ஏற வந்த இருளர் இன சமூக மக்களுக்கு பாலபிஷேகம் செய்து வரவேற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பேருந்தில் ஏற வந்தது. இதைப் பார்த்த ஓட்டுனரும் நடத்துனரும் அவரது கால்களில் பாலபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்தன.ர் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த வீடியோவில் பேருந்து எண் 242 என்றும், இந்த பேருந்தின் ஓட்டுநர் அப்துல்மன்னா, நடத்துனர் பூமணி என்றும் குறிப்பிட்டுள்ளது.
பெரம்பூர் பேருந்து பணிமனையில்இருளர் குடுபத்தினரை பால் அபிசேகம் செய்து ஆரத்தி எடுத்து வரவேற்ற
பஸ் எண்: 242 ஓட்டுனர் அப்துல்மன்னா,நடத்துனர் பூமணி @mkstalin @RRajakannappan @kalilulla_it @abm_tn @BaskarPandiyan3 @The_Abinesh @Priyan_reports @praveenjournali @Rajeshjourn pic.twitter.com/8L9C3htbOg— Nowshath A (@Nousa_journo) December 11, 2021
முன்னதாக செங்கல்பட்டு அருகே கோவிலில் அன்னதானம் வாங்கச் சென்று நரிக்குறவ பெண்ணை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அந்த பெண்ணுடன் அமர்ந்து உணவருந்தினார். அதனை தொடர்ந்து தற்போது இருளர் இன மக்களுக்கு அபிஷேகம் செய்து பேருந்தில் வரவேற்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.