Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… 8 முக்கிய நகரங்களில் வரும் 20-ம் தேதி வரை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தை அடுத்து குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினமும் 4 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 33 நபர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்தியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மகராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், காந்திநகர், பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜூனாகத் ஆகிய 8 முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு டிசம்பர் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவானது தினமும் அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரைக்கும் அமலில் இருக்கும் என்றும் அம்மாநில முழுவதும் கொரோனா தடுப்பு தொடர்புடைய மற்ற அனைத்து வழிகாட்டுதல்கள் நடைமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |