Categories
தேசிய செய்திகள்

“அடடே சூப்பர்”… போஸ்ட் ஆபிஸ்ல சேமிக்கு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய உதவும் அடிப்படையில் நிதியாண்டு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக மக்கள் அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். இதில் அஞ்சலகங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி வைப்புநிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வமகள் திட்டம் போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் அஞ்சலகங்களிலுள்ள சேமிப்பு திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதிமுறைகளும், வட்டி விகிதங்களும் இருக்கிறது.

கடந்த 1-ஆம் தேதி அஞ்சல் நிலைய கணக்குகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் 2022 செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால் நிதி ஆண்டு அடிப்படையில் வட்டி சான்றிதழ் வழங்க துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் சிறு சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி தொகை அவர்களின் அஞ்சல் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அதன்பின் வருமான வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டிற்கான வட்டி விகித சான்றிதழை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே கோர் பேங்கிங்கில் இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். மேலும் வட்டி சான்றிதழுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்ற தகவல்களும் வந்துள்ளது.

Categories

Tech |