இந்தியாவில் உள்ள 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கேரளம், மிசோரம், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கு மத்திய நலவாழ்வு துறை செயலர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு ஊரடங்கு, கூட்டம் கூடுவதற்கு தடை, விழாக்களில் பங்கேற்போர் எண்ணிக்கையை வரையறுத்தல் உள்ளிட்ட முறைகளை பின்பற்றும் படி அறிவுறுத்தியுள்ளது.