Categories
உலக செய்திகள்

“இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே”…. ஜனவரி 1 முதல் அமல்…. செம ஹேப்பி நியூஸ்….!!!

அரசுப் பணியாளர்களுக்கு இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்றும் 3 தினங்கள் விடுமுறை என்றும் ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரையிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைபெற்று வருகிறது. அதாவது ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆகவே அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதால் அன்று மட்டும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாடுகளில் பணி தினங்களில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 1-ம் தேதி முதல் திங்கள்-வியாழன் காலை 7.30 மணிக்கு பணி தொடங்கி, மாலை 3.30 மணி வரை என தொடர்ந்து 8 மணி நேரம் வேலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரையிலும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அன்று வேலை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு வேலை தொடங்கி மதியம் 12 மணிவரை என 4.30 மணிநேரம் மட்டுமே வேலை செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்ததில் இருந்து சனி மற்றும் ஞாயிறு போன்ற நாட்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேலை நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஷார்ஜா 2.5 நாட்கள் விடுமுறையை 3 நாட்களாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய முறை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தகைய உத்தரவு வணிகச் சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வேகத்தைத் தொடரும் என்று ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |