Categories
மாநில செய்திகள்

19 ஆண்டுக்கொரு முறை நடக்கும் அரிய நிகழ்வு….. கார்த்திகையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு…!!

ஸ்ரீரங்கத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 20 நாள்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும். ஆனால் இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி வருகிறது.
பொதுவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி மார்கழி மாதம் சுக்ல் பட்ச ஏகாதசியன்று நடைபெறும். இந்த ஆண்டு மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசி மார்கழி இறுதியில் வருகிறது.

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் திருவிழா தை மாதம் புனர்பூச நாளில் ஓடவேண்டும் என்பது நியதி. இந்த ஆண்டு புனர்பூசம் நாள் தை மாதம் 4ஆம் தேதியே வந்து விடுகிறது. இதனால் வைகுந்த ஏகாதசி ஒரு மாதம் முன்னதாகவே கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்றே நடத்த வேண்டி உள்ளது. இது போன்ற நிகழ்வு 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும்.

Categories

Tech |