பூஸ்டர் டோஸ் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இன்று நடைபெற்ற 14வது மெகா தடுப்பு சி மூலமாக 20,45,347 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதில் 6,81,346 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 13,64,001 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
தற்போது வரை பூஸ்டர் டோஸ் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இரண்டு தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.