தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது .
இதனால் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்ற கருத்துக்கள் பரவி வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.