3 படகுகளில் என்ஜின் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் கடற்கரையில் 3 நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நாட்டுகளில் இருந்த என்ஜினை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து படகு உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவர் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மேல் விசாரணைக்காக வழக்கு தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் படகு என்ஜினை திருடிய மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.