Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும்…. 81 லட்சம் பேருக்கு தடுப்பூசி…. மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 133 கோடியை நெருங்கியுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 81 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |