நாய் சேகர் படத்தின் ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”நாய் சேகர்”. கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் எழுதிய இந்த ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.