Categories
மாநில செய்திகள்

டிச.13-ம் தேதி முதல்….. 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே…. வெளியான அறிவிப்பு….!!!

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா 3-வது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துரை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13-ம் தேதி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஏதாவது ஓர் சான்றிதழை பக்தர்கள் வழங்கினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |