தமிழகத்தில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சே,ரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது.
இதனிடையே அடுத்த 2 மணி முதல் 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.