அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணம். இந்த மாகாணத்தில் அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளி காற்று தாக்கியதால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த சூறாவளி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் கென்டகி பகுதியில் சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.