Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தனது பிறந்தநாளில்…. TNPSC மாணவர்களுக்கு…. நடிகர் ரஜினி செம சர்பிரைஸ்…!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளில் அனைவரும் வியக்க வைக்கும் விதமாக ஒரு நல்ல காரியத்தை தொடங்கியுள்ளார்.

அதாவது ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார். இதற்காக ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பயிற்சி அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த திட்டம் வழக்கறிஞர் சத்தியகுமார் நிர்வகிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி எம்.வி சுதாகர் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |