அமெரிக்காவின் அர்கன்சாஸ், கென்டக்கி ஆகிய மாகாணங்களை தாக்கிய சூறாவளி காற்றில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் கென்டக்கி, இல்லினாய்ஸ், அர்கன்சாஸ், ஆகிய மாகாணங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது. அதனை தொடர்ந்து வாகனங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவை சேதமானதோடு, மின்சாரம் இல்லாமல் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் இருளில் தவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சூறாவளி தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை 70 முதல் 100 வரை அதிகரிக்கலாம் என்றும் கென்டக்கி மாகாண ஆளுநர் ஆண்ட்டி பெஷேர் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வரலாறு காணாத அளவுக்கு கென்டக்கி மாகாணத்தை சூறாவளி மிக மோசமாக தாக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.