கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் 6 வார கருவை கலைப்பதற்கு தடை விதித்து கடந்த செப்டம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு அம்மாகாண ஆளுநரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். இந்த தீர்மானத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பை வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே அமலில் இருந்த 20 வாரக்கால வரையிலான கருவை கலைக்கலாம் என்ற நிலையே தொடர வேண்டும் என்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சட்டமானது இன்னலை ஏற்படுத்தும் என்றும் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிபர் ஜோ பைடனிற்கு மிகுந்த கவலையளித்துள்ளதாகவும் அமெரிக்காவில் உள்ள பெண்களின் உடல் நலப்பாதுகாப்பு சட்டத்திற்கு இது சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.