இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள இலனோய் மாநிலத்தில் பலத்த சூறாவளி காற்றானது வீசியது. இந்த நிலையில் புனித லூயிஸ் நகரில் உள்ள அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு ஓன்று உள்ளது. இதன் மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
குறிப்பாக அந்த கிடங்கில் இருந்தவர்கள் கட்டிட இடிபாட்டில் சிக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.