Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் இறந்த தந்தை…. அதிர்ச்சியில் மகளுக்கு நேர்ந்த விபரீதம்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த சில நிமிடங்களில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள தும்பல் பகுதியில் கூலித்தொழிலாளி சின்னமாது என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மகள் லோகாம்பாள் மற்றும் மகன்கள் வெங்கடேஷ், மணி ஆகியோர் இருந்தனர். இதில் லோகாம்பாளுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் சீனி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இவர்களில் லோகாம்பாள் தனது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சின்னமாது திடீரென்று உயிரிழந்து விட்டார்.

இதனை அறிந்த மகள் லோகாம்பாள் தனது கணவர் வீட்டில் இருந்து தந்தை வீட்டுக்கு ஓடிவந்தார். இதனையடுத்து தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அழுது கொண்டிருந்த லோகாம்பாள் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் லோகாம்பாள் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் தந்தை- மகள் 2 பேரின் சடலத்தையும் உறவினர்கள் அடக்கம் செய்தனர். இவ்வாறு தந்தை இறந்த அதிர்ச்சியில் அவர் உடல் மீது சாய்ந்து மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |