பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான மறைந்த மரோடோனாவின் கைக்கடிகாரத்தை திருடிய காவலாளியை அசாம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
அர்ஜென்டினாவில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான மறைந்த மரோடோனா வசித்துள்ளார். இவருடைய மறைவிற்குப் பிறகு துபாயிலுள்ள தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பில் மரோடோனாவின் கை கடிகாரமும், பிற பொருட்களும் இருந்துள்ளது.
ஆனால் தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த மரோடானாவின் 20 லட்ச மதிப்புடைய கை கடிகாரத்தை அதன் காவலாளி ஒருவர் திருடியுள்ளார். அதன்பின்பு காவலாளி தன்னுடைய தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று கூறி விட்டு தன்னுடைய சொந்த ஊரான அசாமிற்கு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மறைந்த மரோடோவின் பொருட்களை பாதுகாத்து வைத்திருந்த தனியார் நிறுவனம் துபாய் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனை விசாரணை செய்த துபாய் காவல்துறை அதிகாரிகள் காவலாளியின் சொந்த ஊரான அசாம் மாநில போலீசிற்கு இதுதொடர்பான தகவலை கொடுத்துள்ளார்கள்.
இந்த தகவலின் பேரில் அசாம் மாநில காவல்துறை அதிகாரிகள் மறைந்த பிரபல கால்பந்து விளையாட்டு விரரான மரோடோவின் 20 லட்சம் மதிப்புடைய கைக்கடிகாரத்தை திருடிய தனியார் நிறுவனத்தின் காவலாளியை அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.