ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மருந்து பொருட்களை அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்ற பிறகு முதன் முறையாக மனிதநேயமுடன் உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அடிப்படையில் இந்தியா இந்த உதவியை செய்துள்ளது.
இதனிடையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து டெல்லிக்கு 10 இந்தியர்கள் மற்றும் 94 ஆப்கானிஸ்தானியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அந்த விமானத்திலேயே இந்த மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதைத்தவிர ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் என்று இந்தியா முன்பே தெரிவித்து இருந்தது.