Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : பெங்காலை பந்தாடியது தமிழ்நாடு ….! தமிழக அணி ஹாட்ரிக் வெற்றி ….!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – பெங்கால் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 87 ரன்னும் ,  பாபா இந்திரஜித் 64 ரன்னும் குவித்தனர் .பெங்கால் அணி சார்பில் முகேஷ் குமார் மற்றும் அங்கித் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர் .

இதன்பிறகு 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களமிறங்கியது. ஆனால் தமிழக அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது .இதனால் பெங்கால் அணி 39.1  ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னில் சுருண்டது. இதில் தமிழக அணி தரப்பில் சிலம்பரசன் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் தமிழக அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |