Categories
உலக செய்திகள்

இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா….? தீவிர ஆலோசனையில் அமெரிக்க அதிபர்….!!

அமெரிக்க அரசு, இராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில், தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்  கொண்ட 18 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்கி வருகிறார்கள்.

மேலும், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் அரசு, நாட்டின் ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கெர்பி கூறியிருக்கிறார்.

அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தற்போது வரை இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |