Categories
பல்சுவை

அனைத்து ஊழியர்களுக்கும் செம ஹேப்பி நியூஸ்…. சூப்பரான புத்தாண்டு பரிசு…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொருளாதாரம் ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர்.

இந்தநிலையில், அமெரிக்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக The Conference Board ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது. இதில் பங்கேற்ற 50% நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்த விரும்புவதாக தெரிவிக்கின்றனர். அதன்படி, கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு அமெரிக்க ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2022-ஆம் ஆண்டில் தற்போது வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 3.9% சம்பள உயர்வு கிடைக்கும். அதில் குறிப்பாக ஆய்வில் பங்கேற்ற 46% நிறுவனங்கள் புதிய ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வேலையை மாற்றிய ஊழியர்களுக்கு 6.6% ஊதிய உயர்வு கிடைத்துள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 1.1 கோடி வேலைவாய்ப்புகள் இருந்துள்ளன. அதில் 65 லட்சம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 42 லட்சம் ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பள உயர்வு தகவலறிந்த அமெரிக்க ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |