பிக்பாசிலிருந்து இந்த வாரம் இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார்.
இந்நிலையில், இந்த வாரம் அபிநய் அல்லது நிரூப் எலிமினேஷன் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வாரம் இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆகியுள்ளதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.