Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ராகுல், அஸ்வினை தட்டி தூக்க காத்திருக்கும் புதிய அணிகள் ….!!!

15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15-வது ஐபிஎல் சீசன் தொடரில் லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2  புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன .இதில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்கள் அணியில் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களை அறிவித்துள்ளது . அதேசமயம் புதிய அணிகளாக  லக்னோ,அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் தங்கள் அணியில் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பாகவே எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இதில் கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா ,ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் மற்றும் சுப்மன் கில் ஆகிய வீரர்களை தங்கள் அணியில் தக்கவைக்க  புதிய அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கே.எல்.ராகுலும் , டெல்லி அணிக்காக அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர், சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் கொல்கத்தா அணியில் சுப்மன் கில் விளையாடினர். இதனிடையே அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |